PUBLISHED ON : மார் 31, 2025

வைட்டமின் எஃப் என்பது ஒரு வகை கொழுப்பு அமிலம்.
ரியல். வைட்டமின் எஃப் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது வைட்டமின் அல்ல. இது இரண்டு விதமான கொழுப்பு அமிலங்களால் ஆனது. அவை ஆல்ஃபா லினோலெனிக் அமிலம் (ஒமேகா - 3), லினோலெனிக் அமிலம் (ஒமேகா - 6). 1920இல் இந்த இரண்டையும் கண்டறிந்த விஞ்ஞானிகள் முதலில் இவற்றை வைட்டமின் என்று எண்ணி பெயர் வைத்தனர். பிறகு தான் இவை கொழுப்பு அமிலங்கள் என்று தெரிந்தது.
இவை இரண்டுமே இன்றியமையாத சத்துகள். அதாவது இவை இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். நம் உடலில் உள்ள செல்களின் சுவர்களுக்கு ஆற்றல் தருபவை இவை தான். ரத்த அழுத்தம் சீராக இருக்கவும், நோயெதிர்ப்பு மண்டலம் சரியாகச் செயல்படவும் இவை இன்றியமையாதவை. முந்திரி, பாதாம், வால்நட், ஃப்ளாக் விதை, சூரியகாந்தி விதை, சோயா பீன்ஸ் எண்ணெய் ஆகியவற்றில் இந்தச் சத்துகள் நிறைந்துள்ளன.