
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. தமிழக காவல்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த, 25வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், எந்த மாநில போலீசார் சாம்பியன் பட்டம் வென்றனர்?
அ. தமிழ்நாடு
ஆ. அசாம்
இ. கேரளம்
ஈ. மத்தியப் பிரதேசம்
2. 'டுவிட்டர்' நிறுவனத்தை அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி, 'எக்ஸ்' என்று மறுபெயரிட்டதால், நீக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் பிரபலமான எந்தச் சின்னம், ரூ. 30 லட்சத்திற்கு ஏலம் போனது?
அ. பறவை
ஆ. யானை
இ. பன்றி
ஈ. மீன்
3. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட, பி.எல்.ஐ., (PLI) எனும் திட்டத்தின், தமிழ் விரிவாக்கம் என்ன?
அ. சீர்மிகு நகரங்கள் திட்டம்
ஆ. தேசிய தொழில் சேவை
இ. உற்பத்தி சார் ஊக்குவிப்பு
ஈ. தூய்மை இந்தியா திட்டம்
4. வயலின் இசைக் கலைஞரான யாருக்குச் சமீபத்தில், சென்னை மியூசிக் அகாடமியின், 'சங்கீத கலாநிதி' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது?
அ. ஆர்.கே.ஸ்ரீராம் குமார்
ஆ. எச்.கே.வெங்கட்ராம்
இ. எல்.சுப்ரமணியம்
ஈ. பாலபாஸ்கர்
5. மின்சார வாகனங்கள் தொடர்பான, 15க்கும் மேற்பட்ட அரசின் திட்டங்களைக் கையாள்வதில், எந்தக் கல்வி நிறுவனம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது?
அ. அண்ணா பல்கலை
ஆ. சென்னை ஐ.ஐ.டி.
இ. சென்னை பல்கலை
ஈ. ராஜீவ்காந்தி பல்கலை
6. இந்தியாவின் பாரம்பரிய பானமான எதற்கு, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது?
அ. பானகம்
ஆ. கோலி சோடா
இ. லஸ்ஸி
ஈ. சாம்பரம்
7. இந்தியாவின் எந்த யூனியன் பிரதேசத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்குத் தினமும் மாலை சிற்றுண்டியில், சிறுதானிய பிஸ்கட், சிறுதானிய மிட்டாய்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன?
அ. சண்டிகர்
ஆ. ஜம்மு காஷ்மீர்
இ. புதுச்சேரி
ஈ. லட்சத்தீவு
8. ஜோர்டானில் நடந்த ஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் சுனில்குமார் வென்ற பதக்கம் என்ன?
அ. தங்கம்
ஆ. வெள்ளி
இ. பிளாட்டினம்
ஈ. வெண்கலம்
விடைகள்: 1. ஆ, 2. அ, 3. இ, 4. அ, 5. ஆ, 6. ஆ, 7. இ, 8. ஈ.