தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/எனக்குப் பிடிச்ச சிறுவர் நிகழ்ச்சிகள்!

எனக்குப் பிடிச்ச சிறுவர் நிகழ்ச்சிகள்!

எனக்குப் பிடிச்ச சிறுவர் நிகழ்ச்சிகள்!


PUBLISHED ON : செப் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவர்களின் கற்பனை உலகம் அலாதியானது. அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமான நூல்களைப் போலவே, தனித்தொலைக்காட்சிகளும் ஏராளம் வந்துவிட்டன. அத்தொலைக்காட்சியில் உங்களைக் கவர்ந்த நிகழ்ச்சி எது? ஏன்? என்று கேட்டிருந்தோம். சென்னை, மடிப்பாக்கம், சாய் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அகமது ஜலாலுதீன்

எனக்கு அவென்சர்ஸ் சீரிஸ் எல்லாம் பிடிக்கும். அதுல குறிப்பா, கேப்டன் அமெரிக்கா பிடிக்கும். ஒரு சாதாரண மனுஷனை சூப்பர் ஹீரோ வீரராக மாத்தி, போருக்கெல்லாம் பயன்படுத்துறாங்க. பார்க்கும்போதே சூப்பராக இருக்கும்.

மகேஷ்

ஹங்காமா டிவியில் வரும் டோரிமான் பிடிக்கும். அதுல ரோபோ பத்தி எல்லாம் நிறைய காட்சிகள் வரும். அதுல நோபிடான்னு ஒரு சோம்பேறிப் பையன் வருவான். அவனுக்கு டோரிமான் கைடு பண்ணும். அதைக்கேட்டு அவனும் நடப்பான். டோரிமான் மாதிரி நமக்கும் ஓர் ஆள் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு தோணும்.

கிருபாசாகர்

எனக்கு சிங்சான் பிடிக்கும். அவன் ரொம்ப சேட்டைக்காரனாக இருந்தாலும், அம்மா சொற்படி நடக்கிறவன். அந்த விஷயம் ரொம்ப எனக்குப் பிடிக்கும். எல்லாத்தையும் சுயமா யோசிச்சு செய்யற அவனுடைய கேரக்டர் ரொம்பவே பிடிக்கும்.

முகிலா

ருத்ரா தான் எனக்குப் பிடிச்ச தொடர். அதுல மூணு நண்பர்கள் இருப்பாங்க. மேஜிக் நிறைந்த தொடர் அது. எந்தக் கஷ்டம் தடங்கல் வந்தாலும், நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கணும்னு அவங்க போராடுவதுதான் கதை. நண்பர்கள் ஒற்றுமையையும் அதுல சிறப்பா காட்டி இருப்பாங்க. நல்லொழுக்கங்களைப் போதிக்கும் தொடர்கள் எனக்குப் பிடிக்கும்.

ஹர்ஷா

நிஞ்சா ஹட்டோரி தொடர் பிடிக்கும். இதுல ஹட்டோரி நிஞ்சா வீரன் நல்லவன். கெமுமாக்கி கெனிச்சி கெட்டவன். அவனால் பாதிக்கப் படுகிறவங்களுக்கு உதவி செய்வான் ஹட்டோரி. இதுல சூப்பரான ஒரு நாயும் உண்டு. நல்ல தொடர் இது.

அவந்திகா

டோரா எனக்குப் பிடிச்ச தொடர். அவ எல்லாவற்றையும் பாசிட்டிவா எடுத்துகுவா. அதுல புஜ்ஜியும் டோராவும் அடிக்கிற லூட்டி ரொம்ப பிடிக்கும். குள்ளநரி திருடிகிட்டே இருக்கும். திருடக்கூடாதுன்னு சொல்லுற அந்த கான்செப்ட் ஆகட்டும், சுற்றுலா, அட்வென்சர் நிறைஞ்ச கதைன்னு எல்லாமே சுவாரசியமாக இருக்கும். 11வது வந்த அப்புறமும் எனக்கு டோராதான் பிடிச்சிருக்கு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us