உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 29, 2016

அ நிறம் | அளவு
மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான, ரகுராம் ராஜனின் பதவிக் காலம், வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதை அடுத்து, புதிய ஆளுநராக உர்ஜித் படேல் (52) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது துணை கவர்னராக இருந்து வரும் படேல், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்றவர். இவர், சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்), பாஸ்டன் கன்சல்டிங் குரூப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்துள்ளார்.
