உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 29, 2016

அ நிறம் | அளவு
உலகின் மிகப்பெரிய முத்து, பிலிப்பைன்ஸ் நாட்டு மீனவர் ஒருவரின் வலையில், 10 வருடங்களுக்கு முன்பு சிக்கியது பற்றிய தகவல், தற்போது வெளியாகி உள்ளது. இந்த முத்தின் எடை 34 கிலோ; நீளம் 2.2 அடி; அகலம் ஒரு அடி. அந்த மீனவர், தனது படகில் தட்டுப்பட்ட இந்த முத்தினை ஓர் அதிர்ஷ்டக் கல்லாக நினைத்து, இவ்வளவு காலமாகத் தனது வீட்டில் வைத்திருந்தார். வேறொரு பகுதிக்குக் குடிபெயர வேண்டி இருந்ததால், சுற்றுலாத்துறையில் பணியாற்றிவரும் தனது உறவினர் ஒருவரிடம், விலை மதிப்பற்ற இந்த முத்தை வழங்கியுள்ளார். அந்தப் பெண்மணி, நகர மேயரிடம் ஒப்படைத்ததால், இந்தத் தகவல் தற்போது வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது.
