தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புதிய புத்தகங்களோடு புதிய பயணம்

புதிய புத்தகங்களோடு புதிய பயணம்

புதிய புத்தகங்களோடு புதிய பயணம்


PUBLISHED ON : ஆக 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவைப் பற்றி உங்களைப் போல் சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்ல, இன்றும் சிறந்த நூல் என்றால் அது 'நமது இந்தியா' என்ற புத்தகம்தான். அதேபோல், தமிழ் சிறுவர் இலக்கியத்தின் முக்கியமான நூல்களாக போற்றப்படுபவை ஜாதக கதைகள், காட்டுக்கு யார் ராஜா, ஓலைவெடி போன்ற நூல்களே. இவற்றையெல்லாம் வெளியிட்டு பெருமை சேர்த்தது இந்திய அரசின் 'பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்'தான்.

இவை மட்டுமல்லாமல் பல்வேறு தலைப்புகளில் 60 புத்தகங்களை வரை வெளியிட்டுள்ளது பப்ளிகேஷன்ஸ் டிவிஷன். பின்னர் ஒரு தொய்வு ஏற்பட்டது. தமிழில் புதிய புத்தகங்களே வெளிவரவில்லை. தற்போது சுமார் 20 ஆண்டுகள் கழித்து, மீண்டும் புதிய புத்தகங்களோடு தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது இந்த நிறுவனம்.

நவபாரதச் சிற்பிகள் வரிசையில் சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் நூல்கள் அடுத்து வரவிருக்கின்றன. 'இப்போதாவது எண்ணிப் பாருங்கள்' என்ற நூலில், பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் எழுதிய கடிதங்கள் இடம்பெறப் போகின்றன. புத்தரின் போதனைகளை எடுத்துச் சொல்லும், 'புத்தரின் புனித வாக்குகள்' நூலும் வரப்போகிறது.

மேலும் ரசியா சுல்தான், ராணி லக்ஷ்மிபாய், குழந்தைகள் மகாபாரதம் ஆகிய 20 நூல்களை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது 'பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்.' மொழிபெயர்ப்புகளோடு நேரடி தமிழ் நூல்களை வெளியிடுவதிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தவிருக்கிறது. குறைந்த விலையில், தரமான கட்டமைப்போடு, சிறுவரும் பெரியவர்களும் படிக்கும்படியான செறிவான நூல்களை வெளியிட்டு புகழ்பெற்ற இந்த அரசுத் துறை நிறுவனம், மீண்டும் இயங்கத் தொடங்குவது தமிழுக்கு வளம் சேர்க்கும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us