sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தொடி

/

தொடி

தொடி

தொடி


PUBLISHED ON : ஆக 07, 2017

Google News

PUBLISHED ON : ஆக 07, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடி என்பது, பழங்காலத்தில் வழங்கிய ஒரு சொல். பெண்கள் அணியும் அணிகலன்களில் ஒன்று. இப்போதும் உடைக்கு ஏற்ற வண்ணத்தில் விதவிதமாக வாங்கி அணிகிறார்கள், கரங்களில். என்ன புரிந்து விட்டதா வளையல் என்று!

வளை என்பது சங்கைக் குறிக்கும். பழங்காலத்தில் சங்குகளை வாளினால் அறுத்து, அரத்தினால் ராவி (தேய்த்து) வளையல்கள் செய்தார்கள்.

'பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை

வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து'

நெடுநெல்வாடையில் வரும் (141, 142) வரிகள் இவை.

'பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய மயிரையுடைய முன் கையில், வலம்புரிச் சங்கால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள்' என்பதே பாடலின் வரி.

சங்கு வளையல் அணிவதை, அக்காலப் பெண்கள் நாகரிகமாகக் கருதினார்கள். சாதாரணப் பெண்கள் விலை அதிகமில்லாத இடம்புரி சங்கால் செய்த வளையல்களை அணிந்திருந்தார்கள். செல்வந்தர் வீட்டுப் பெண்கள், விலை உயர்ந்த வலம்புரி சங்கால் செய்த வளையல்களை அணிந்தனர். பொன்னால் செய்த வளையல்களையும் அணிந்திருந்தார்கள்.

'தொடிகழி மகளிரின் தொல் கவின் வாடி' என்பது (238) புறநானூற்றுப் பாடல். வெளிமான் என்ற மன்னன் இறந்து விட்டான். அதனால் அவன் ஆதரித்த புலவர் கூட்டம் கலங்குகிறது. இதைப் பாடும் பெருஞ்சித்திரனார், 'தங்கள் குடும்பங்கள், வளையல் களையப்பட்ட பெண்களைப் போல ஒளி மங்கி விட்டன' என்று குறிப்பிடுகிறார்.

'பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்'

என்பது குறள் (1234) .

கணவன் இறந்ததால், அழகு கெட்டு தோள்கள் வாடுகின்றன. கவலையில் உடல் மெலிந்து, பொன் வளையல்கள் (பைந்தொடி) அவள் கரங்களில் இருந்து கழன்று விழுகின்றன என்று குறிப்பிடுகிறது.

'விறலியர் முன்கையுந் தொடியிற் பொலியா' என்ற புறநானூற்றுப் (244) பாடலில், விறலியருடைய முன்கைகளும் தொடியணியாது ஓய்ந்து கிடக்கின்றன என்று குறிப்பிடுகிறது. 'தொடி' என்னும் சொல்லில், ஏராளமான சங்கப் பாடல்கள் விரவிக் கிடக்கின்றன.






      Dinamalar
      Follow us