PUBLISHED ON : ஜூன் 26, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி பல்கலைக்கழக ஆய்வு மாணவியான சோனாலி கார்க் மற்றும் அவரது குழுவினர், சில மாதங்களுக்கு முன், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், மனிதனின் கைவிரல் நக அளவில் உள்ள சிறிய தவளை இனத்தைப் புதிதாகக் கண்டறிந்தனர்.
அதே குழுவினர் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், சமீபத்தில் மேலும் நான்கு புதிய தவளை இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, தவளை இனங்கள், 'ஃபெஜெர்வர்யா' எனும் இந்திய தவளையினத்தைச் சேர்ந்தது என்று முடிவுக்கு வந்துள்ளனர். இக்கண்டுபிடிப்புகள் தவளைகளையும், இதுபோன்ற அரிய வகை உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.