sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அடுத்த வாரம்

/

அடுத்த வாரம்

அடுத்த வாரம்

அடுத்த வாரம்


PUBLISHED ON : ஜன 20, 2020

Google News

PUBLISHED ON : ஜன 20, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வருகை

அண்டை நாடான இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின், மகிந்த ராஜபட்சே முதல் முறையாக இந்தியாவுக்கு அடுத்த மாதத் தொடக்கத்தில் வரவுள்ளார். தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இலங்கை அதிபர் கோத்தபயா, தன் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தார்.

போட்டி

தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட மாஸ்டர் சதுரங்கப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு சுற்றுகளாகப் போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டி வரும் 25ஆம் தேதி நிறைவு பெறுகிறது. வெற்றி பெறுவோருக்கு, மொத்தம் 15 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.

பயிற்சி

சென்னையில் வரும் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஏற்றுமதி இறக்குமதி சட்டத் திட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு: www.editn.in.

ஆய்வு வகுப்பு

தேசிய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.க்களில் படிக்காத, மற்ற இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, ஆராய்ச்சி பயிற்சி வகுப்புகளை, சென்னை ஐ.ஐ.டி. நடத்த உள்ளது. மே 20 முதல் ஜூலை 19 வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பிப். 29க்குள் விண்ணப்பிக்க:- sfp.iitm.ac.in/contactus






      Dinamalar
      Follow us