PUBLISHED ON : டிச 11, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு ஆண்டும், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் சார்பாக, ஆண்டின் சிறந்த சொல்லைத் தேர்வு செய்யவதற்காக கணக்கெடுப்பு நடத்தப்படும். அதில், இந்த ஆண்டு 'Rizz' (ரிஸ்) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
'ரிஸ்' என்பது ஒரு பேச்சுவழக்குச் சொல். வசீகரமான, கவர்ச்சிகரமான என்பதை ஆங்கிலத்தில் 'கரிஸ்மா' (Charisma) என்று அழைப்பார்கள். அந்த 'கரிஸ்மா'வின் பேச்சுவழக்கு தான் 'ரிஸ்'.
'கரிஸ்மா' எப்படி 'ரிஸ்' எனச் சுருங்கும்? ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் அப்படித் தான். ரெபிரிஜிரேட்டர் (Refrigerator) என்பதை பிரிட்ஜ் (Fridge) எனவும், இன்புளுயன்ஸா (Influenza) என்பதை ப்ளூ (Flu) எனவும் சுருக்கிக்கொண்டோம். அது போலத் தான் கரிஸ்மா (Charisma) என்பதன் சுருக்கமே ரிஸ் (Rizz).