
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
A, B, C ஆகிய மூவரும் சகோதரர்கள். A மூத்தவன். B இரண்டாமவன். C கடைக்குட்டி. இவர்கள் ஆளுக்கொரு செல்லப் பிராணி வளர்க்கிறார்கள்.
சில குறிப்புகளை இங்கு தருகிறோம். அவற்றை வைத்து யார் யார் எந்தெந்தப் பிராணியை வளர்க்கிறார்கள் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஆரம்பிக்கலாங்களா?
கிளிக்குச் சொந்தக்காரன் அதற்கு ரூக் என்று பெயர் வைக்கவில்லை.
B-யின் செல்லப்பிராணி பெயர் பால். அது வெண்ணிறம் கொண்டது அல்ல.
ஹீரோ என்பது கிளி அல்ல. அது C-க்குச் சொந்தமானது.
முயலை வளர்ப்பது A அல்ல.
இதில் முயல், பூனை, கிளி ஆகியவற்றை வளர்ப்பது யார்? அவற்றின் பெயர்கள் என்னென்ன?
விடைகள்:
A வளர்ப்பது பூனை; அதன் பெயர் ரூக்.
B வளர்ப்பது கிளி; அதன் பெயர் பால்.
C வளர்ப்பது முயல்; அதன் பெயர் ஹீரோ.