தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வேண்டாம் போர்

வேண்டாம் போர்

வேண்டாம் போர்


PUBLISHED ON : ஏப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோலையூர் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்துவந்தார் வாணவ வர்மன். திடீரென நாட்டில் கடும் பஞ்சம் வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து பக்கத்து நாட்டு மன்னன் வீரவேல் கேசரி, புறாவின் காலில் ஓலையைக் கட்டி அனுப்பி போருக்காகச் செய்தி அனுப்பினான்.

நாட்டில் புகழ் பெற்று விளங்கிய விவசாயி ஒருவரை அணுகி உதவி கேட்டார் மன்னர். விவசாயி படைவீரர்கள் அனைவருக்கும் உணவுக்கான பொறுப்பை, தான் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். எந்தப் பொருளைப் போட்டாலும் நூறாக மாற்றித் தரும் பானை ஒன்று விவசாயியிடம் இருந்தது. அந்தத் துணிச்சலில்தான் விவசாயி உணவுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

வாணவ வர்மன் வீரவேல் கேசரியின் நாட்டின் மீது படை எடுத்துப் போனான். தொடர்ந்து வாரக் கணக்காக சண்டை நடந்தது. அந்தப் போரில் இரண்டு மன்னர்களும் போர்க்களத்தில் காயம் பட்டுக் கிடந்தார்கள். அத்தை வீட்டுக்குச் செல்வதற்காக அந்த வழியே சென்று கொண்டிருந்த ராமு இதைப் பார்த்தான். அவனது பாட்டி அத்தைக்காகக் கொடுத்து அனுப்பியிருந்த மூலிகைகளும் அவனது பையில் இருந்தன. இரண்டு மன்னர்களுக்கும் சிகிச்சை செய்தான். மன்னர்கள் குணமாகி எழுந்து, ''உனக்கு என்ன வேண்டும் கேள்!'' என்றார்கள். ''நீங்கள் சச்சரவின்றி அவரவரது நாட்டை மட்டும் ஆட்சி செய்தால் போதும்'' எனக் கேட்டுக்கொண்டான். அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மன்னர்கள் இரு நாடுகளுக்குமான நல்லெண்ணத் தூதுவனாக அவனை நியமித்தார்கள்.

அ.ராகுல்

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு,

தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளி, தேவகோட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us