தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வேவு பார்த்தவன்

வேவு பார்த்தவன்

வேவு பார்த்தவன்


PUBLISHED ON : ஏப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டில் நிலவும் வறுமையைப் பயன்படுத்தி பக்கத்து நாட்டு அரசன் தன் நாட்டின் மீது படையெடுத்து வரும் செய்தியை ஒற்றன் மூலம் அறிகிறார் ராஜா. படையை திரட்ட ஆரம்பிக்கிறார். சிறுவர்களையும் அதற்கு உதவியாய்ப் பயன்படுத்த நினைக்கிறார். அப்படி ஒரு சிறுவனைத் தேர்வு செய்கிறார். அவன் பெயர் ராமு. அவனை அழைத்து, ''பக்கத்து நாட்டில் உள்ள உன் அத்தை வீட்டிற்குச் செல். அங்குள்ள நிலையை அறிந்து வா...'' என்கிறார்.

ராமு நினைத்துக்கொள்கிறான், 'நான் எதிரி நாட்டு மன்னனின் மகன். உங்கள் நாட்டை வேவு பார்க்கவே இங்கு வந்தேன்' என்று. நாட்டில் நிலவும் பஞ்சம் சிறுவனான ராமுவின் மனதில் மிகுந்த கவலையைக் கொடுத்தது. அவன் ராஜா சொன்னபடி தன் சொந்த நாட்டிற்கே வேவு பார்க்கும் சிறுவனாய் செல்கிறான்.

சென்றவன், தன் தந்தையிடம் சொல்லி, உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு படையுடன் வந்தான். ஒற்றனாகச் சென்றவன், படையுடன் வந்ததைக் கண்ட அரசர் திகைத்தார். ராமு அரசனிடம் '' நான் எதிரி நாட்டு இளவரசன். இங்குள்ள நிலைமையை என் தந்தையிடம் சொல்லி போரை நிறுத்தினேன். உதவியாகவும் உணவுப் பண்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன்...'' என்றான். அரசர் அந்த இளவரசனை நட்புடன் தழுவிக்கொண்டார்.

து. தேவா

ஒன்பதாம் வகுப்பு இ,

தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us