PUBLISHED ON : ஏப் 11, 2016

பகைவர்களிடம் தன் நாட்டை இழந்த அரசர், காட்டில் பதுங்கி இருந்தார். தன் நாட்டை மீட்கத் திட்டம் தீட்டினார்.
அரசருக்கு உதவி செய்ய நினைத்தார் விவசாயி ஒருவர். தன் நிலத்தில் கிடைத்த மந்திரப் பானை ஒன்றை அரசரிடம் கொண்டுப் போய் கொடுத்தார். அந்தப் பானைக்குள் எதைப் போட்டாலும் அது பன்மடங்காகப் பெருகி விடும் ஆற்றல் கொண்டது. அந்த ஆற்றலைக் கொண்டு நிறைய வீரர்களை உருவாக்கினார் அரசர். படையைத் திரட்டினார். ஆனாலும் பகை நாட்டின் பயிற்சி பெற்ற வீரர்களை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் ராமு என்ற மாணவன் தன் அத்தை வீட்டிற்கு வந்தான். ராமுவின் மாமா அரசரின் அமைச்சர். ராமு சிறந்த புத்திசாலி. தன் அத்தையின் மூலம் அந்நாட்டின் நிலையை அறிகிறான். ''மந்திரத்தின் மூலம் அரசர் நாட்டை கைப்பற்ற நினைப்பது மூடத்தனம். தன் வீரர்களுக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்து தன்னம்பிக்கையுடன் போரிடுவதே அரசருக்கு வெற்றியளிக்கும்...'' என்றான். ராமுவின் மாமா இதை அரசரிடம் கூறினார்.
அரசர் மந்திரப் பானையை விவசாயியிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, தன் வீரர்களுக்கு, தன்னம்பிக்கையுடன் பயிற்சி கொடுத்தார். போரில் வெற்றியும் பெற்றார். சிறுவனாக இருந்தாலும் சிறந்த யோசனை கூறிய ராமுவைப் பாராட்டிப் பரிசு தந்தார் அரசர்.
இ. சேஷாத்ரி
பத்தாம் வகுப்பு,
ஏ.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
கள்ளக்குறிச்சி.
