
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2017ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, பிரிட்டனைச் சேர்ந்த காஸோ இஷிகுரோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜப்பான், நாகசாகியில் பிறந்தவர். சிறுவயதிலேயே, இஷிகுரோவின் குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்தது. ஆங்கில இலக்கியத்திலும், தத்துவ இயலிலும் பட்டம் பெற்ற இவருக்கு வயது 62. இவர் சிறுகதை, புதினம், நாடகம், திரைக்கதை என இலக்கியத்தில் பல தளங்களில் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். சமகால ஆங்கில எழுத்தாளர்களில் பிரபலமான இஷிகுரோ, ஏற்கனவே புக்கர் விருதையும் பெற்றுள்ளார்.

