தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பனிக்கரடி இல்லை துணிக் கரடி!

பனிக்கரடி இல்லை துணிக் கரடி!

பனிக்கரடி இல்லை துணிக் கரடி!


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாளை மடித்து உருவங்கள் செய்யும் ஓரிகாமி கலை போல, துணியை மடித்து உருவங்கள் செய்யும் கலை ஒன்றும் உள்ளது. இதற்கு பேப்ரிகாமி (Fabrigami) என்று பெயர். ஒரு சிறிய டர்க்கி டவலைச் சுருட்டி, ஒரு அழகிய கரடி பொம்மை செய்யப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

1. செவ்வக வடிவில் ஒரு டர்க்கி டவல்.

2. ரப்பர்பேண்ட் - 3

3. பாசியுடன் கூடிய குண்டூசிகள் - 2, பட்டன்கள் - 2, அலங்கரிக்கப் பயன்படும் கற்கள்.

4. பசை

படத்தில் உள்ளது போலக் கைக்குட்டையை விரித்து, மூன்றில் ஒரு பகுதியை மேற்புறமாக மடிக்க வேண்டும்.

மேலும் கீழும் இருக்கும் பகுதிகளை மையம் நோக்கிச் சுருட்ட வேண்டும்.

மையப்பகுதியில் முறுக்கி, இடது பக்கத்தில் இருக்கும் துணியைத் தலை கீழாக விரிக்க வேண்டும். பக்கவாட்டுப் பகுதிகளை உள்நோக்கி மடிக்க வேண்டும்.

படத்தில் காட்டியுள்ளபடி ரப்பர்பேண்ட் போட்டு, கழுத்து மற்றும் காது பகுதிகளை உருவாக்க வேண்டும்.

குண்டூசிகளைப் பொருத்திவிட்டால் கண்கள் வந்துவிடும். ஸ்டோனை ஒட்டினால் மூக்கும் தயார். பட்டன்களை உடல் பகுதியில் ஒட்டி விட வேண்டும்.

எளிமையான முறையில் செய்யப்பட்டாலும், மிகவும் நேர்த்தியாக இருக்கும் இந்தக் கரடி பொம்மை, பார்ப்பவரை உடனே ஈர்த்துவிடும்.

- ஓவியா டீச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us