தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முடியாது என்று எதுவுமில்லை கேலிச் சித்திர நாயகனின் சாதனை

முடியாது என்று எதுவுமில்லை கேலிச் சித்திர நாயகனின் சாதனை

முடியாது என்று எதுவுமில்லை கேலிச் சித்திர நாயகனின் சாதனை


PUBLISHED ON : டிச 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்ட் டிஸ்னி : 1901 - 1966

பிறந்த ஊர்: சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா

சாதனை: புகழ்பெற்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்; ஒரே ஆண்டில் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றவர்

டிஸ்னி சிறுவனாக இருந்தபோது, ஏதாவது படம் வரைந்து பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் விற்பார். அதை அவரது தந்தை விரும்புவதில்லை; தாய் விரும்பி உற்சாகப்படுத்துவார். உயர்நிலைப் பள்ளியில் ஓவியம் கற்று, கேலிச்சித்திரம் வரையும் கலையை வளர்த்துக் கொண்டார். கரும்பலகையில் ஓவியம் வரைந்துகொண்டே கதை சொல்வது, இவருடைய தனிச்சிறப்பு. நகைச்சுவையும் அவருக்கு கைவந்த கலை. அதற்கு காரணம். அவருடைய அம்மாவின் நகைச்சுவை உணர்வுதான்.

வேலை கிடைக்காமல், கார் நிறுத்தும் இடத்தில் அவர் குடியிருந்தார். அந்த சமயத்தில், ரயில் பயணங்களின்போது, நோட்டுப்புத்தகத்தில் கிறுக்கி வைத்திருந்த எலி ஓவியங்கள் அவரின் ஞாபகத்துக்கு வந்தன. தன் அண்ணனிடம், 'இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம். நமக்குத் துணையாக ஒரு எலி இருக்கும்' என்றார். அப்போது அறிமுகமான அந்த எலிதான், கேளிக்கை உலகத்தை மாற்றி அமைத்த 'மிக்கி மவுஸ்'.

அது சில ஆண்டுகளிலேயே, உலகப் புகழ் பெற்றது. டிஸ்னி ஹாலிவுட்டில் கால் எடுத்து வைத்த பிறகு, பேரும், புகழும், பணமும் குவிந்தது. அடுத்தடுத்து, அவர் தயாரித்த படங்களில் மிக்கி செய்த சேட்டைகளைப் பார்த்து, உலகமே ரசித்து வியந்தது. இவரது 26 படங்கள் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றன. 59 முறை ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றன.

மிக்கிக்கு பிறகு, இவர் உருவாக்கிய மின்னி மவுஸ், டொனால்டு டக், கூஃபி போன்ற கதாபாத்திரங்களும் புகழ்பெற்றன. தான் கண்ட கனவு உலகத்தை, 'டிஸ்னிலேண்ட் பார்க்' என்ற பூலோக சொர்க்கமாக உருவாக்கி, 'முடியாது என்று எதுவுமில்லை' என்ற நம்பிக்கையை, செயலாக்கி காட்டியவர் வால்ட் டிஸ்னி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us