தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பழமையான ஷாப்பிங் மால்

பழமையான ஷாப்பிங் மால்

பழமையான ஷாப்பிங் மால்


PUBLISHED ON : ஏப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐஸ் கிரீம் வாங்கிச் சாப்பிடலாம். வண்ண வண்ண உடைகள் வாங்கலாம். உடைக்குத் தகுந்த மாதிரி கைக்கடிகாரங்கள், காதணி, மணி வாங்கலாம்... எல்லாப் பொருட்களையும் ஓர் இடத்தில் வாங்கக்கூடிய வர்த்தகக் கட்டடமான ஷாப்பிங் மால்கள் நம் அனைவருக்கும் பிடித்த இடம்.

பழங்காலத்திலேயே இப்படி ஒரு ஷாப்பிங் மால் இருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? பண்டைய ரோம் அரசர் ட்ராஜன்ஸ் (Trajan) ஆட்சிக் காலத்தில் (கி.பி. 100- 117) உலகின் முதல் ஷாப்பிங் மால் கட்டப்பட்டது. டமாஸ்கஸ் நகரைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் அபோலோடோரஸ் (Apollodorus), இந்தக் கட்டடத்தை வடிவமைத்தார்.

வெவ்வேறு அளவிலான 150 அறைகள் கொண்டது அந்த வணிக வளாகம். நான்கு மாடிகள். ஒவ்வொரு கடைக்கும் ஒரு விற்பனையாளர். சில அறைகளில் அலுவலகங்கள் இயங்கின. மாலுக்கு ட்ராஜன்ஸ் மார்கெட் (Trajan's Market) என்று, அரசரின் பெயரையே வைத்தனர்.

ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது கூட, இந்த மாலுக்கு, சேதமே ஏற்படவில்லை என்பதில் இருந்து இது எவ்வளவு உறுதியானது என்று தெரிந்துகொள்ளலாம்.

கோலோசியம் (Colosseum)என்று சொல்லப்படும் கேளிக்கை அரங்கத்துக்கு எதிரே இருந்தது. இப்போதும் இந்தக் கட்டடம் இருக்கிறது, ஆனால், சிதிலமடைந்த கட்டடமாக!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us