
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
01. இந்தியாவின் அண்டை நாடான சீனா, தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்தப் பகுதியில் ஓடும், யார்லாங் ஜாங்க்போ என்ற நதியில், மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட திட்டமிட்டு உள்ளது?
அ. நான்ஜிங்
ஆ. பீஜிங்
இ. திபெத்
ஈ. ஷாங்காய்
02. பொருளாதார மேதையாக அனைவராலும் பாராட்டப்பட்ட, இந்தியாவின் முன்னாள் பிரதமர், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். அவர் யார்?
அ. தேவகெளடா
ஆ. ஐ.கே.குஜ்ரால்
இ. வாஜ்பாய்
ஈ. மன்மோகன் சிங்
03. மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில், எந்தெந்த வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வாக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது?
அ. 6, 7
ஆ. 5, 8
இ. 7, 8
ஈ. 5, 6
04. தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
அ. ஆந்திரப்பிரதேசம்
ஆ. தமிழ்நாடு
இ. தெலங்கானா
ஈ. கர்நாடகம்
05. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள, எந்த நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி, மத்திய அரசுக்கு, அந்த நாட்டு அரசு கடிதம் எழுதியுள்ளது?
அ. பாகிஸ்தான்
ஆ. ஈராக்
இ. உக்ரைன்
ஈ. வங்கதேசம்
06. அமெரிக்காவில் தொழிலதிபராக உள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை, ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக, டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார். இவர், தமிழகத்தின் எந்தப் பகுதியில் பிறந்தவர்?
அ. சென்னை
ஆ. மதுரை
இ. தஞ்சாவூர்
ஈ. கும்பகோணம்
07. தோஹாவில் நடந்த, ஆசிய யூத் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்?
அ. பார்வ் செளத்ரி
ஆ. சதீஷ் சிவலிங்கம்
இ. குர்தீப் சிங்
ஈ. ரகலா வெங்கட்
08. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, எந்த நாட்டின் உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' என்ற விருதை, அந்த நாட்டின் மன்னர் மஷேல் அல் அஹமது அல் ஜபார் அல் ஷாபா சமீபத்தில் வழங்கினார்?
அ. செளதி அரேபியா
ஆ. பெஹ்ரெய்ன்
இ. குவைத்
ஈ. மொனாகோ
விடைகள்: 1. இ, 2. ஈ, 3. ஆ, 4. ஆ, 5. ஈ,6. அ, 7. அ. 8. இ,