
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
01. சாலை விபத்துகளைக் குறைக்கும் முயற்சியாக, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு, எந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது?
அ. தமிழகம்
ஆ. குஜராத்
இ. உத்தரப்பிரதேசம்
ஈ. மிசோரம்
02. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், நடப்பு நிதியாண்டு டிசம்பர் வரை, 3 லட்சத்து 73,393 டன்னுக்கு, எந்தப் பொருளை இறக்குமதி செய்து சாதனைப் படைத்துள்ளது?
அ. சமையல் எண்ணெய்
ஆ. நிலக்கரி
இ. காற்றாலை இறகுகள்
ஈ. உரம்
03. விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சியை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெற்றிகரமாக நிகழ்த்தி, இந்தச் சாதனையைப் படைத்துள்ள எத்தனையாவது நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது?
அ. முதலாவது
ஆ. இரண்டாவது
இ. மூன்றாவது
ஈ. நான்காவது
04. நாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் இருப்பதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் (47,26,000) உள்ள நிலையில், பெண்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்களில், எத்தனையாவது இடத்தில் (12,85,000) உள்ளது?
அ. முதலாவது
ஆ. இரண்டாவது
இ. மூன்றாவது
ஈ. நான்காவது
05. இந்திய அளவில், காற்றின் மாசு குறியீட்டு ஆய்வில், மாசு குறைந்த நகரமாக எதை, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது?
அ. சென்னை
ஆ. மும்பை
இ. திருநெல்வேலி
ஈ. பெங்களூரு
06. மத்திய அரசு அண்மையில், எந்த உணவுப் பொருளின் சாகுபடியைப் பாதுகாக்க, தேசிய வாரியம் அமைத்துள்ள நிலையில், அதைப் பயிரிடும் விவசாயிகள் குறைந்து வருவதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது?
அ. கரும்பு
ஆ. மிளகாய்
இ. வாழை
ஈ. மஞ்சள்
07. இரண்டு குழந்தைகளைப் பெற்றவர்கள் மட்டுமே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர். இது, மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் என, எந்த மாநில முதல்வர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்?
அ. ஸ்டாலின், தமிழ்நாடு
ஆ. சந்திரபாபு நாயுடு, ஆந்திரம்
இ. சித்தராமையா, கர்நாடகம்
ஈ. நிதிஷ்குமார், பீஹார்
08. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளவர்?
அ. சிதான்ஷு கோடக்
ஆ. கபில் தேவ்
இ. சச்சின் டெண்டுல்கர்
ஈ. அனில் கும்ப்ளே
விடைகள்: 1.இ, 2. அ, 3. ஈ, 4. ஆ, 5. இ, 6. ஈ, 7. ஆ, 8. அ.