sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அற்புத ஆங்கிலம்: சத்தத்துக்கும் பெயர் உண்டே...

/

அற்புத ஆங்கிலம்: சத்தத்துக்கும் பெயர் உண்டே...

அற்புத ஆங்கிலம்: சத்தத்துக்கும் பெயர் உண்டே...

அற்புத ஆங்கிலம்: சத்தத்துக்கும் பெயர் உண்டே...


PUBLISHED ON : ஜன 20, 2025

Google News

PUBLISHED ON : ஜன 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வித்தியாசமான சில ஒலிகளுக்கு ஆங்கிலத்தில் என்னென்ன பெயர்கள் என்பதைப் பார்ப்போம்.

* நீரில் ஏதோ ஒரு பொருள் விழுந்தால் ஒரு சத்தம் வரும். வாளித் தண்ணீரில் கனமான ஒரு ஷாம்பூ பாட்டிலை (மூடியைத் திறந்துவிடாமல்) போட்டுப் பாருங்கள். அந்தச் சத்தம் கேட்கும். அதற்கு ஆங்கிலத்தில் Splash என்று பெயர்.

* எடையுள்ள ஒரு பொருள். உலோகம் அல்ல. அது உறுதியான தரையில் விழும்போது ஒரு சத்தம். அது, Thud.

* ஈரமற்ற ஒரு பொருள். அது உடையும்போது அல்லது நாம் சொடக்குப் போடும்போது வரும் ஒலி Snap.

* உலோகங்கள், பாத்திரங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன், மோதிக்கொள்ளும்போது ஏற்படும் பேரொலி, Clang.

* சரியாகப் பராமரிக்கப்படாத, பழைய கதவைத் திறக்கும்போது நீளமாகக் கேட்குமே ஒரு கீச்சொலி அதன் பெயர், Creak.

* மழைத்தூறல் துளி தரையைத் தொடும்போது ஒரு மெல்லிய சத்தம் வரும். அதற்கு Patter என்று பெயர்.

* உணவுப்பொருள் எண்ணெயில் வறுபடும்போது வருமே ஒரு 'ஹிஸ்ஸ்ஸ்ஸ்' ஒலி, அதை, Sizzle என்கிறார்கள்.

முறுக்கு, சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கினால் எழக்கூடிய 'கரமுர' சத்தத்துக்கு என்ன பெயர்?

விடைகள்: Crumble.






      Dinamalar
      Follow us