
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
01. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்த, சிறந்த அரசு நிர்வாகத்திற்கான துறை துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் யார்?
அ. கமலா ஹாரிஸ்
ஆ. விவேக் ராமசாமி
இ. பிரமிளா ஜெயபால்
ஈ. ராஜா கிருஷ்ணமூர்த்தி
02. தமிழக நில அளவைத் துறையில், அதிகப் பரப்பளவு நிலங்களை, மிகக் குறுகிய நேரத்தில் அளக்க, நவீன தொழில்நுட்பமான இந்தக் கருவி, சமீப ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பெயர் என்ன?
அ. ரேடார்
ஆ. ரோவர்
இ. ரேன்ஜர்
ஈ. ஸ்பைடர்
03. வெளிநாட்டினரைக் கவரும் வகையில், 'டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்'களுக்கு, 'கோல்டன் விசா' வழங்கும் திட்டத்தை, எந்த மேற்காசிய நாடு சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது?
அ. இஸ்ரேல்
ஆ. துருக்கி
இ. ஐக்கிய அரபு அமீரகம்
ஈ. அர்மேனியா
04. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எந்தத் திட்டத்திற்காக, ஆளில்லாத செயற்கைக்கோளை அனுப்ப தேவையான வீரர்கள் தங்கும் கலன்களை, பெங்களூரில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு, இஸ்ரோ அனுப்பி வைத்துள்ளது?
அ. ககன்யான்
ஆ. சந்திரயான்
இ. ஆதித்யா
ஈ. நிசார்
05. 'தமிழகம் பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்திற்குப் பெண்களைக் கல்வி பயில அனுப்பும் வடகிழக்கு மாநில பெற்றோர், டில்லியைப் பாதுகாப்பாக உணர்வதில்லை' என்று சமீபத்தில் பேசியவர்?
அ. ஸ்டாலின், தமிழக முதல்வர்
ஆ. கோவி.செழியன், உயர்கல்வி அமைச்சர்
இ. ரவி, தமிழக கவர்னர்
ஈ. செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர்
06. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள குந்தி, கும்லா, சிம்தேகா, சாத்ரா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது?
அ. ஜார்க்கண்ட்
ஆ. ராஜஸ்தான்
இ. உத்தரப்பிரதேசம்
ஈ. பீஹார்
07. அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக, வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் 'எச்1பி' விசாவை, எந்த இரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்?
அ. சிங்கப்பூர், கத்தார்
ஆ. இந்தியா, சீனா
இ. அயர்லாந்து, போலந்து
ஈ. நெதர்லாந்து, டென்மார்க்
8. அடுத்த மாதம் நடக்கவுள்ள, சாரண -சாரணியர் இயக்கத்தின் வைர விழா, தமிழகத்தின் எந்தப் பகுதியில் கொண்டாடப்பட உள்ளது?
அ. சென்னை
ஆ. சேலம்
இ. கோவை
ஈ. திருச்சி
விடைகள்: 1. ஆ, 2. ஆ, 3. இ, 4. அ, 5. ஆ, 6. இ, 7. அ, 8. ஈ.