
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான யார், பிரதமர் மோடியின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்?
அ. உர்ஜித் படேல்
ஆ. ரகுராம் ராஜன்
இ. சுப்பாராவ்
ஈ. சக்தி காந்த தாஸ்
2. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான, எஃப்.பி.ஐ. இயக்குநராக சமீபத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், பகவத் கீதை மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இவர் பெயர் என்ன?
அ. பிரதீப் ஷர்மா
ஆ. காஷ் படேல்
இ. ஜே.டி.வான்ஸ்
ஈ. உஷா
3. ரியல் எஸ்டேட் இணையதளம் ஒன்று வெளியிட்ட, இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் தரவரிசைப் பட்டியலில், முதலிடத்தைப் புனே, ஐதராபாத் பகிர்ந்துள்ள நிலையில், சென்னை எந்த இடத்தில் உள்ளது?
அ. முதலாவது
ஆ. மூன்றாவது
இ. ஐந்தாவது
ஈ. ஆறாவது
4. ஜெர்மனி நாட்டில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், பழமைவாத கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்?
அ. பிரெட்ரிக் மெர்ஸ்
ஆ. ஏஞ்சலா மெர்கல்
இ. ஹார்ஸ்ட் சீஹோஃபர்
ஈ. மார்ட்டினா பியட்ஸ்
5. அடுத்த ஆண்டு முதல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு எத்தனை முறை நடத்துவதற்கான வரைவு விதிமுறைகளுக்கு, சி.பி.எஸ்.இ. ஒப்புதல் அளித்துள்ளது?
அ. ஒன்று
ஆ. மூன்று
இ. இரண்டு
ஈ. நான்கு
6. இந்தியாவின் எந்த மாநிலத்தில், வரும் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ. உட்பட அனைத்துப் பள்ளிகளிலும், 1 - 10ஆம் வகுப்பு வரை, எந்த மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி, அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது?
அ. தெலுங்கு, தெலங்கானா
ஆ. தமிழ், தமிழ்நாடு
இ. மலையாளம், கேரளம்
ஈ. கன்னடம், கர்நாடகம்
7. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், குஜராத் அணியை வீழ்த்தி, எந்த அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, வரலாறு படைத்தது?
அ. ஆந்திரம்
ஆ. பீஹார்
இ. கேரளம்
ஈ. சண்டிகர்
8. அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் உள்ள, 150 ஆண்டுகள் பழமையான, 'ரிசல்யுட் டெஸ்க்' (Resolute Desk) என்ற மேசை, எந்த ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த,'எம்.எம்.எஸ். ரிசல்யுட்' என்ற கப்பலில் இருந்த விலை உயர்ந்த மரத்தினால் தயாரிக்கப்பட்டது?
அ. நெதர்லாந்து
ஆ. பிரிட்டன்
இ. ஜெர்மனி
ஈ. பெல்ஜியம்
விடைகள்: 1. ஈ, 2. ஆ 3. இ, 4. அ, 5. இ, 6. அ, 7. இ, 8. ஆ.