
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. வாடகை வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்களுக்கு போலீசாரின் உடனடி உதவி கிடைக்க, எந்தப் புதிய வசதியை வாகனங்களில் வைக்கும் திட்டத்தை, சென்னை மாநகர காவல்துறை அறிமுகம் செய்துள்ளது?
அ. க்யூ.ஆர். கோடு
ஆ. புகார் எண்
இ. சிசிடிவி
ஈ. ஜி.பி.எஸ்.
2. உலகளவில் இதுவரை அதிக முதலீடுகளைத் திரட்டிய, பெண்கள் நடத்தும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா எந்த இடத்தில் உள்ளதாக, வணிக தரவு தளமான, 'டிராக்சன்' தெரிவித்துள்ளது?
அ. முதலிடம்
ஆ. இரண்டாம்
இ. மூன்றாமிடம்
ஈ. நான்காமிடம்
3. இந்தியாவிலேயே முதன்முறையாக, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய, தங்கக்கடன் பெறும் ஏ.டி.எம்., எந்த மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது?
அ. தமிழ்நாடு
ஆ. மத்தியப்பிரதேசம்
இ. தெலங்கானா
ஈ. மேற்குவங்கம்
4. 'சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்' எனும் போட்டித் தேர்வில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, இந்தக் கல்வியாண்டு முதல், எந்தக் கல்வி நிறுவனம், சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் வழங்க உள்ளது?
அ. சென்னை ஐ.ஐ.டி.
ஆ. அண்ணா பல்கலை
இ. சென்னை பல்கலை
ஈ. பாரதிதாசன் பல்கலை
5. வடஅமெரிக்க நாடான கனடாவின் பிரதமராகப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்?
அ. ஜஸ்டின் ட்ரூடோ
ஆ. அனிதா ஆனந்த்
இ. டெரி பீச்
ஈ. மார்க் கார்னி
6. 'டீப்சீக்' (Deepseek) என்ற ஏ.ஐ., மாடலை அறிமுகப்படுத்திய சில வாரங்களில், அதைவிட மேம்பட்ட ஏ.ஐ., மாடல் ஒன்றை சீனா அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் என்ன?
அ. லூக்கா (Looka)
ஆ. நோவேனிம் (Novanym)
இ. மானஸ் (Manus)
ஈ. சிந்தியா (Synthia)
7. கிழக்கு ஆப்பிரிக்க நாடான எந்த நாட்டின் மிக உயரிய, 'தி கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓஷன்' என்ற விருதை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக, அந்த நாட்டின் பிரதமர் நவின் ராம்கூலம் அறிவித்துள்ளார்?
அ. சோமாலியா
ஆ. எத்தியோபியா
இ. ருவாண்டா
ஈ. மொரீஷியஸ்
8. முதன்முறையாக டில்லியில் நடந்த, உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில், ஆண்களுக்கான 1500 மீ.வீல் சேர் ஓட்டத்தில், தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர்?
அ. தினேஷ்
ஆ. ரமேஷ்
இ. சுரேஷ்
ஈ. கெளதம்
விடைகள்: 1. அ, 2. ஆ, 3. இ, 4. அ, 5. ஈ, 6. இ, 7. ஈ, 8. ஆ.