
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. ஒசாகா கடல் பகுதியில் அமைந்துள்ள, 'பொறியியல் அதிசயம்' எனக் கருதப்பட்ட கனசாய் சர்வதேச விமான நிலையம், மூழ்கத் தொடங்கியுள்ளது. இது எந்த நாட்டில் உள்ளது?
அ. சீனா
ஆ. ஜப்பான் 
இ. அமெரிக்கா
ஈ. ரஷ்யா
2. பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026இல் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கு, எந்த நாட்டின் அணி முதல்முறையாகத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது?
அ. ஆஸ்திரேலியா
ஆ. சீனா
இ. பாகிஸ்தான்
ஈ. இந்தியா
3.  அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள இந்தியரான சபிஹ் கான், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
அ. உத்தரப்பிரதேசம் 
ஆ. சட்டீஸ்கர்
இ. ஹரியாணா
ஈ. மணிப்பூர்
4. இந்தியாவின் எந்த மாநில அரசு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கொசு உற்பத்தியைத் தடுக்கும் திட்டத்தை, சோதனை முறையில் செயல்படுத்த உள்ளது?
அ. தமிழகம்
ஆ. அசாம்
இ. பீகார்
ஈ. ஆந்திரம் 
5. தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்?
அ. சத்யபிரகாஷ்
ஆ. சூரியபிரகாஷ் 
இ. ஜெகதீஷ்
ஈ. சந்தோஷ்
6. அமெரிக்கத் தொழிலதிபரான எலான் மஸ்க் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் என்ன?
அ. அமெரிக்கா பார்ட்டி 
ஆ. டெஸ்லா பார்ட்டி
இ. விக்டரி பார்ட்டி
ஈ. மஸ்க் பார்ட்டி
விடைகள்: 1. ஆ, 2. ஈ. 3. அ, 4. ஈ, 5. ஆ, 6. அ,                  

