
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. இந்தியாவின் எந்த மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் நிலையில், 5.76 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது?
அ. மத்தியப்பிரதேசம்
ஆ. ஒடிசா
இ. பீகார் 
ஈ. உத்தரப்பிரதேசம்
2. பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை முதன்முறையாக, இந்தியாவிலேயே எந்த மாநில அரசு, 'செமஸ்டர்' முறையில் நடத்துகிறது?
அ. குஜராத்
ஆ. கேரளம்
இ. அசாம்
ஈ. மேற்குவங்கம் 
3. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளவர்?
அ. நரேஷ் 
ஆ. சிவசுந்தர்
இ. மணீந்திர மோகன்
ஈ. ஸ்ரீராம்
4. தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நால்வர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவர் மின்வாரிய தலைவர். யார் அவர்?
அ. அமுதா
ஆ. ராதாகிருஷ்ணன் 
இ. ககன்தீப் சிங் பேடி
ஈ. தீரஜ்குமார்
5. இஸ்ரேல் நாட்டின் மிகச்சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படும், 'அயர்ன் டோம்' அமைப்பைப் பெறும் முதல் ஐரோப்பிய நாடு என்ற சிறப்பை, எந்த நாடு பெற உள்ளது?
அ. ருமேனியா
ஆ. ஆர்மேனியா
இ. ஆஸ்திரியா
ஈ. பல்கேரியா
6. ஜெர்மனியில் நடந்த, 32வது உலகப் பல்கலை விளையாட்டு போட்டியில், ஆண்கள் 50 மீ. நீச்சலில், இலக்கை 24 விநாடியில் கடந்து, தேசியச் சாதனைப் படைத்துள்ள இந்திய வீரர் ரோகித், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
அ. ஆந்திரம்
ஆ. தமிழகம் 
இ. சத்தீஸ்கர்
ஈ. ஹரியானா
விடைகள்: 1. இ, 2. ஈ, 3. இ,  4. ஆ, 5. அ, 6. ஆ.                 

