உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 04, 2016
அ நிறம் | அளவு
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக இருந்த காகித வழி விண்ணப்ப நடைமுறை முடிவுக்கு வருகிறது. ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கும் நடைமுறை இந்தக் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அனைத்து விவரங்களும், அதிகாரபூர்வ அறிவிப்பில் ஆன்லைனில் வெளியாகும். இதற்காக, தமிழகம் முழுவதும், 60 மையங்களில் ஆன்லைன் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
