PUBLISHED ON : அக் 18, 2016

அ நிறம் | அளவு
இந்தியா, ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது அந்நியத் துணிகளை அணியக்கூடாது; அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கதர் துணிகளை அணிய வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவானதுதான் 'காதி'. இத்தகைய காதி தயாரிப்புகளை ஊக்குவிக்க, மத்திய அரசு, 'காதி கிராப்ட்'(Khadi Kraft) போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், காதி பொருட்களை, ஆன்லைன் மூலம் விற்கும் நோக்கில் புதிய இணையதளத்தை அடுத்த மாதம் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் தொடங்க இருக்கிறது. பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு, பொதுமக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து, இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
zeenews.india.com
