PUBLISHED ON : அக் 18, 2016

அ நிறம் | அளவு
ஹாங்காங்கில், உலகின் மிக வயதான பாண்டா கரடி, மரணமடைந்த சம்பவம், பூங்கா நிர்வாகத்தினர் மற்றும் கரடி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காடுகளில் வாழும் பாண்டா கரடிகளுக்கு, சராசரி ஆயுட்காலம் 20 வருடங்களாகவும், பூங்காக்களில் உள்ள கரடிகளுக்கு 30 வருடங்களாகவும் உள்ளது.
இந்நிலையில், ஹாங்காங்கில் உள்ள 'ஓஷன் பார்க்'(Ocean Park), கேளிக்கை பூங்காவில் வசித்து வந்த, 38 வயதான 'ஜியா ஜியா'(Jia Jia) கரடி, உலகின் மிக வயதான கரடி என கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. கடந்த சில நாட்களாக, மூட்டுவலி மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜியா ஜியா கரடி, நேற்று மரணமடைந்தது. சீனாவில் பிறந்த ஜியா ஜியா, 17 வயதாக இருக்கும்போது, ஹாங்காங் பூங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
