PUBLISHED ON : அக் 18, 2016

விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்காக, இரண்டு விஞ்ஞானிகளுடன், 'ஷெங்ஸோ--11' என்ற விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள், விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு மையத்தை அமைக்க, சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக, கடந்த 2013-ம் ஆண்டு 'டியாங்காங்-1' என்ற விண்கலத்தை, சீனா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள், 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தனர். அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இதையடுத்து, 'டியாங்காங்- 2' என்ற விண்கலத்தை, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, மேலும் இரண்டு விஞ்ஞானிகளை, 'ஷெங்ஸோ -11' என்ற அடுத்த விண்கலம் மூலம் நேற்று சீனா அனுப்பி வைத்துள்ளது. அந்த விண்கலத்தில், ஜிங் ஹாய்பெங்க் (Jing Haipeng), சென்டாங் (Chen Dong) என்ற விஞ்ஞானிகள் சென்றுள்ளனர். இவர்களில், 49 வயதான ஜிங் ஹாய்பெங்க், ஏற்கனவே இரண்டு முறை விண்கலத்தில் சென்றுள்ளார். இந்த விஞ்ஞானிகள், ஒருமாத காலம் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில், வரும் 2022ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை, சீனா அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
bbc.com
