உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 23, 2017

அ நிறம் | அளவு
எகிப்தைச் சேர்ந்த அலி ப்ராக் (Ali Farag) என்பவரும் அவரது மனைவி நௌர் எல் தயெப்பும் (Nour El Tayeb) ஒரே நாளில் அமெரிக்க ஒபன் ஸ்குவாஷ் போட்டிகளில் இருவேறு பிரிவுகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர். அக்டோபர் 14 அன்று நடைபெற்ற பெண்கள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை நௌர் வென்ற சில மணி நேரத்திற்குப் பிறகு, அவரது கணவர் அலி ப்ராக் ஆண்கள் பிரிவுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். “நாங்கள் இணைந்து பெறப்போகும் வெற்றிகளில் இது முதலாவது வெற்றி” என்று பெருமிதமாகத் தெரிவித்தனர் இந்த சாம்பியன்கள்.
