PUBLISHED ON : ஜன 30, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்கு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்கான பட்டியலில், 91 வயதான பெண் மருத்துவர் பக்தி யாதவ் இடம்பெற்றுள்ளார். மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர் மருத்துவர் பக்தி யாதவ், கடந்த 68 ஆண்டுகளாக, ஏழை எளிய மக்களுக்கு, இலவச சிகிச்சை அளித்து வருகிறார். 1,000க்கும் அதிகமான பெண்களுக்கு, இலவசமாக பிரசவம் பார்த்துள்ளார். வயதானாலும் ஓய்வில்லாமல் மருத்துவ ஆலோசனை வழங்கிவரும் இவரது சாதனைகளைப் பாராட்டி, மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அளித்துள்ளது. இந்தூர் நகரில், முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண் என்ற பெருமைக்கும் பக்தி யாதவ் சொந்தக்காரர்.

