PUBLISHED ON : நவ 11, 2019

வெப்பமண்டலக் காடுகளில் விளையும் மிகப் பிரபலமான பழ வகைகளில் ஒன்று பப்பாளி.
உலகத்தின் 44 சதவீத பப்பாளித் தேவைக்காக, இந்தியா பப்பாளியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. எனவே, மற்ற பழங்களைவிட பப்பாளி, இந்தியாவின் பொருளாதாரத்துக்கான ஊன்றுகோல்களில் ஒன்று.
இத்தனைக்கும் பப்பாளி, இந்தியாவுக்கு சமீபத்தில்தான் அறிமுகமானது. 1550ஆ-ம்
ஆண்டு மத்திய அமெரிக்கா வழியாகப் பயணம் செய்து, மணிலா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பரவியது.
பின்னர் இது கடல் வழியாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அறிமுகமாகி, பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்தது.
1626-ஆம் ஆண்டு பப்பாளியின் விதைகள் இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. குறுகிய காலத்தில் பப்பாளி, உலகம் முழுக்கப் பரவியதற்கு அதன் இயல்பும் ஒரு முக்கிய காரணம். வாழைமரம் போல பயிரிட்ட ஓராண்டிற்குள் பலன் கொடுக்கும் தாவரம் பப்பாளி. அதனால், மிக விரைவாக உலகம் முழுக்கப் பரவியது.
ஆனால், அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் ஒன்றாகப் பப்பாளி இல்லை. குறிப்பாக, பப்பாளியின் மணம் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால், சமீபகாலமாக ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறுவதற்காக பப்பாளியை உண்ணும் வழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் பப்பாளி உற்பத்தி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
பப்பாளி விளைவதற்கான மிகச் சரியான காலநிலை இந்தியாவில் இருக்கிறது.
பப்பாளியில் பெண் இனமே இனப்பெருக்கம் செய்து பூத்துக் காய்த்து கனிகளைத் தரும்.
- காப்பி
