பொருந்தாத சொல்லைக் கண்டுபிடியுங்கள்!
1. Abundant, Plentiful, Scarce, Ample
2. Analyze, Dissect, Synthesize, Examine
3. Confident, Assured, Doubtful, Certain
4. Deteriorate, Decline, Improve, Worsen
5. Complex, Intricate, Simple, Complicated
(அவசியமென்றால் ஆங்கில அகராதியைப் பயன்படுத்தலாம்)
விடைகள்:
1. Scarce
ஸ்கார்ஸ் என்றால் பற்றாக்குறை, மற்ற அனைத்து சொற்களும் பெரிய அல்லது போதுமான அளவைக் குறிக்கின்றன.
2.Synthesize
சிந்தசைஸ் என்ற சொல்லின் பொருள் தொகுப்பு, அதாவது சில கூறுகளை ஒருங்கிணைத்து முழுமையான ஒன்றை உருவாக்குவது. மற்ற சொற்கள் அனைத்தும் எதாவது ஒன்றை, உதாரணமாக, கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றைப் பாகமாகப் பிரித்து ஆய்வு செய்வது அல்லது விளக்குவது என்று பொருள்படும்.
3.Doubtful
டவுட்ஃபுல் என்பது சந்தேகத் தன்மையைக் குறிக்கிறது, மற்ற சொற்கள் அனைத்தும் 'உறுதி' என்ற பொருள் கொண்டவை.
4.Improve
இம்ப்ரூவ் என்ற சொல்லின் பொருள் 'மேம்படுத்துதல்'. மற்ற சொற்கள் மோசமடைதல் அல்லது சரிவைக் குறிக்கின்றன.
5.Simple
சிம்பிள் என்றால் எளிமை, மற்ற சொற்கள் அனைத்தும் விரிவான, சிக்கலான போன்ற பொருள் கொண்டவை.