sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இரண்டில் ஒன்று

/

இரண்டில் ஒன்று

இரண்டில் ஒன்று

இரண்டில் ஒன்று


PUBLISHED ON : ஆக 26, 2024

Google News

PUBLISHED ON : ஆக 26, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்க்கண்ட சொற்றொடர்களை வாசியுங்கள். கோடிட்ட இடத்தில் பொருத்தமான சொற்களை நீங்கள் நிரப்ப வேண்டும். அடைப்புக் குறிக்குள் இரு சொற்கள் தரப்பட்டிருக்கும். அவற்றுள் ஒன்றுதான் சரியான விடை.

01. இரவு அவன் ______ வானத்தைப் பார்த்தபோது, எரிகல் வீழ்வது தெரிந்தது. (எதார்த்தமாக, எதேச்சையாக)

02. வளர்ப்பு நாய் இறந்துபோனதை எண்ணி அவன் அழுதபோது, நண்பன் ராமுதான் அவனை அழவேண்டாம் என ___________ (ஆற்றுப்படுத்தினான், ஆறுதல் சொன்னான்)

03. ஒரு ஜடப்பொருளுக்கு நீளம், அகலம், உயரம் என்று மூன்று _________ உண்டு. (பரிமாணங்கள், பரிணாமங்கள்)

04. தினமும் ஒரு குட்டிக் கதை வீதம் அந்த எழுத்தாளர் வாட்ஸாப் செயலியில் __________ எழுதுகிறார். (தொடர்கதை, கதைத்தொடர்)

05. திடீரென மரக்கிளை விழுவதைக் கவனித்து பூனை ________ தாவிக் குதித்தது. (தன்னிச்சையாக, அனிச்சையாக)

விடைகள்:

1. எதேச்சையாக. இதற்கு, தற்செயலாக என்று பொருள். அவன் திட்டமிட்டு வானத்தைப் பார்க்கவில்லை; தற்செயலாகப் பார்த்தான்.

2. ஆறுதல் சொன்னான். ஆற்றுப்படுத்தினான் என்பது, 'ஒரு வழியைக் காட்டினான்' என்று பொருள்படும்.

3. பரிமாணங்கள். பரிணாமம் என்பது வளர்ச்சி நிலை.

4. கதைத் தொடர். ஒரு கதையே தினமும் தொடர்ந்தால் அது தொடர்கதை. தினத்துக்கு ஒன்று என, பல கதைகள் இருப்பதால் இது கதைத் தொடர்.

5. அனிச்சையாக. திட்டமிட்டுச் செய்வது தன்னிச்சை. அதாவது தன் விருப்பம். திட்டம் இன்றிச் செய்வது அனிச்சை.






      Dinamalar
      Follow us