
நிலக்கடலையின் பூர்விகம் தென் அமெரிக்கா.
ரியல். உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படும் கடலையின் பூர்விகம் தென் அமெரிக்காவின் பிரேசில் நாடு. ஆனால் இதன் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை ஆசிய நாடுகள் தான். இதன் தாவரவியல் பெயர் அராச்சி ஹைபோகாகியா என்பதாகும். இது ஃபேபேசி எனப்படும் பயறு குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு முக்கியமான எண்ணெய் வித்து. வெப்பமண்டல, மிதவெப்ப மண்டலங்களில் நன்றாக விளையும். இவற்றில் நிறைய மரபணு மாற்றப்பட்ட வகைகள் வந்துவிட்டன.
அல்லியம் தாவரப் பூக்கள் ஆப்பிள் போல் மணக்கும்.
ரீல். அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்த சில தாவரங்களின் பூக்கள் பொதுவாக வெங்காயத்தின் வாசனை கொண்டிருக்கும். அல்லியம் என்பதே வெங்காயம், பூண்டு குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களின் பொதுப்பெயர் தான். அவற்றில் அழகுக்காக வளர்க்கப்படுபவை அலங்கார வெங்காயம் (Ornamental onions) எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஊதா நிறத்தில் மலரும். சில நேரங்களில் வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு முதலிய நிறங்களிலும் இருக்கும். வசந்த, கோடை காலங்களில் இவை செழித்து வளரும்.