
கறுப்புக் கடல் சிப்பி, வட அட்லான்டிக் பெருங்கடலில் வாழ்கிறது.
உண்மை. கறுப்புக் கடல் சிப்பியின் (Ocean Quahog) அறிவியல் பெயர் ஆர்டிகா ஐலாண்டிகா (Arctica islandica). இது உலகின் மிக நீண்ட ஆயுள் கொண்ட கடல் உயிரினங்களில் ஒன்று. கடல் சங்கு வகை. இவை வட அட்லான்டிக் பெருங்கடலில் வாழ்கின்றன. இவற்றில் சில சிப்பிகள்
500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துள்ளன. இவை மிக மெதுவாக வளர்கின்றன. அதாவது ஓர் ஆண்டில் வெறும் 0.1 மில்லிமீட்டர் மட்டுமே வளரும். இவற்றின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் குளிர்ந்த கடல் நீரும், குறைந்த உடல் செயல்பாடுகளும் என்று சொல்லபடுகிறது. இவற்றின் ஓடு வட்டமான வடிவத்தில் இருக்கும். ஓட்டின் மேற்பரப்பு பொதுவாகக் கறுப்பு நிறத்தில் இருக்கும். தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகளை உண்ணுகின்றன. இவற்றின் இறைச்சி உணவாகப் பயன்படுகிறது. ஓடுகள் அலங்காரப் பொருளாக உபயோகமாகின்றன. கறுப்புக் கடல் சிப்பிகள் மிகவும் அரிதானவை, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள். இவற்றின் நீண்ட ஆயுள், மெதுவான வளர்ச்சி காரணமாக இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.