sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : அக் 21, 2024

Google News

PUBLISHED ON : அக் 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. அணு ஆயுதங்களுக்கு எதிரான செயல்பாடு, பிரசாரம் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும், எந்த நாட்டைச் சேர்ந்த, 'நிஹோன் ஹிடாங்க்யோ' என்ற அமைப்புக்கு, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. தாய்லாந்து

ஈ. நேபாளம்

2. தமிழகத்தில், கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவுத்திறன், 9,270 மெகாவாட்டாக அதிகரித்துள்ள நிலையில், நாட்டிலேயே சூரியசக்தி மின் நிறுவுதிறனில், தமிழகம் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?

அ. முதலாவது

ஆ. இரண்டாவது

இ. மூன்றாவது

ஈ. நான்காவது

3. சமீபத்தில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஐக்கிய அரபு அமிரேட்ஸ் நாட்டின் எந்தப் பகுதிக்குச் செல்வதற்காக புறப்பட்ட பயணியர் விமானம் ஒன்று, திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக, திருச்சியிலேயே பாதுகாப்புடன் தரையிறங்கியது?

அ. பெஹ்ரெய்ன்

ஆ. ஷார்ஜா

இ. அபுதாபி

ஈ. கத்தார்

4. தொழிலதிபர் ரத்தன் டாடா மறைந்ததை அடுத்து, டாடா குழுமத்தின் அறக்கட்டளைப் பிரிவான, 'டாடா டிரஸ்ட்ஸ்' தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

அ. ரதூன் டாடா

ஆ. ஆனந்த் டாடா

இ. தருண் டாடா

ஈ. நோயல் டாடா

5. கர்நாடக மாநிலம் உதயமான எந்தத் தினத்தில், அனைத்து கல்வி, வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகளில், கன்னடக் கொடி கட்டாயம் பறக்கவிடப்பட வேண்டும் என, மாநில துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்?

அ. அக்டோபர் 31

ஆ. நவம்பர் 1

இ. நவம்பர் 5

ஈ. நவம்பர் 23

6. அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, தெற்காசிய, இந்திய வாக்காளர்களைக் கவரும் வகையில், தேர்தலில் போட்டியிடும் எந்தத் தலைவருக்கான பிரசார பாடலை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார்?

அ. டொனால்டு டிரம்ப்

ஆ. கமலா ஹாரிஸ்

இ. ஜே.டி. வான்ஸ்

ஈ. பராக் ஒபாமா

7. குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் அரச குடும்பத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்?

அ. வினோத் காம்ப்ளி

ஆ. அஜய் ஜடேஜா

இ. சச்சின் டெண்டுல்கர்

ஈ. அசாருதீன்

8. வடஆப்பிரிக்காவில் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய பாலைவனமான எங்கு, கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக, சமீபத்தில் மழை வெள்ளம் தேங்கியது?

அ. சஹாரா

ஆ. அரேபியன்

இ. அன்டார்டிக்

ஈ. தார்

விடைகள்: 1. ஆ, 2. இ, 3. ஆ, 4. ஈ, 5. ஆ, 6. ஆ 7. ஆ, 8. அ.






      Dinamalar
      Follow us