
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள் தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. அமெரிக்காவில், நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, அமெரிக்க முன்னாள் அதிபர் யார்?
அ. பில் கிளின்டன்,
ஆ. பரக் ஒபாமா
இ. டெனால்டு டிரம்ப்,
ஈ. ஜார்ஜ் புஷ்
2. சூரிய மின்னாற்றல் வாயிலாக, 5,512 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, எந்த மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது?
அ. ஆந்திரப்பிரதேசம்,
ஆ. ராஜஸ்தான்
இ. மத்தியப்பிரதேசம்,
ஈ. தமிழ்நாடு
3. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான, எவ்வளவு கோடி ரூபாய் மதிப்புள்ள 6,140 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது?
அ. ரூ.10,050 கோடி,
ஆ. ரூ.5,577 கோடி
இ. ரூ.8,000 கோடி,
ஈ. ரூ.3,500 கோடி
4. உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தின் எந்த இரு பகுதிகள் உட்பட, நாடு முழுவதும் 12 இடங்களில், புதிய விமான நிலையங்களை, மத்திய அரசு அமைக்க உள்ளது?
அ. வேலூர், நெய்வேலி
ஆ. ஈரோடு, கடலூர்
இ. விழுப்புரம், காஞ்சிபுரம்
ஈ. செங்கல்பட்டு, திருவள்ளூர்
5. கற்றலை மன அழுத்தம் இல்லாததாக மாற்றும் நோக்கில், பள்ளிகளில் எந்ததெந்த வகுப்புகளுக்கு, புத்தகப் பையில்லா நாட்களை அமல்படுத்த, மத்திய கல்வி அமைச்சகம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது?
அ. 6 - 9,
ஆ. 1 - 5,
இ. 6 - 8,
ஈ. 1 - 9
6. இந்திய லோக்சபையின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள, பாரதிய ஜனதா கட்சி எம்.பி. யார்?
அ. சஞ்சய் ஜெய்ஸ்வால்
ஆ. சந்தோஷ் கங்வார்
இ. ஜிதேந்திர சிங்,
ஈ. சஞ்சீவ் பல்யான்
7. மத்திய அரசு தேர்வாணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள, முன்னாள் சுகாதாரத்துறை செயலர் யார்?
அ. பிரியா பிரதீப்,
ஆ. ஸ்வேதா
இ. ப்ரீத்தி சுதன்,
ஈ. லதா ஜீவன்
8. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற (வெண்கலம்) முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்துள்ளவர்?
அ. அஞ்சலி பகவத்,
ஆ. மனு பாக்கர்
இ. அனிதா தேவி,
ஈ. சோமா தத்தா
விடைகள்: 1. ஆ, 2. ஈ, 3. ஆ, 4. அ, 5. இ, 6. அ, 7. இ, 8. ஆ.