sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : ஆக 19, 2024

Google News

PUBLISHED ON : ஆக 19, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

01. தமிழகத்தைச் சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, உலகளாவிய சந்தை வாய்ப்பு கிடைக்க, தமிழகத்தின் முதல் வெளிநாட்டு ஸ்டார்ட் அப் மையம், எந்த நாட்டில் தொடங்கப்பட்டு உள்ளது?

அ. அமெரிக்கா

ஆ. துபாய்

இ. சிங்கப்பூர்

ஈ. ரஷ்யா

02. வணிகம் செய்வதை எளிதாக்க வகை செய்யும் விதத்தில், நூற்றாண்டு பழமையான (1923) சட்டத் திட்டத்தை மாற்றி, எதற்கான புதிய மசோதா, ராஜ்யசபாவில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது?

அ. விமானம்

ஆ. கன்டெய்னர்

இ. கொதிகலன்

ஈ. பூச்சுக்கொல்லி

03. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் மாணவர்கள், 'குட் மார்னிங்' சொல்வதற்குப் பதிலாக, 'ஜெய்ஹிந்த்' எனக் கூறும்படி, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது?

அ. ஹரியாணா

ஆ. அசாம்

இ. குஜராத்

ஈ. பஞ்சாப்

04. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கெளன்சில் உருவாக்கியுள்ள, அதிக மகசூல் அளிக்கக்கூடிய எத்தனை வகை பயிர் விதைகளை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்?

அ. 100

ஆ. 95

இ. 115

ஈ. 109

05. மத்திய அரசில் மிகவும் முக்கிய, உயரிய பதவியாகக் கருதப்படும், கேபினட் செயலர் பதவி, தமிழகத்தைச் சேர்ந்த, மத்திய நிதித்துறை செயலரான யாருக்குச் சமீபத்தில் வழங்கப்பட்டது?

அ. டி.வி.சோமநாதன்

ஆ. டி.கே.சாமிநாதன்

இ. எஸ்.பத்மநாபன்

ஈ. எம்.லோகநாதன்

06. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள, 10 சட்டசபைத் தொகுதிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது?

அ. பீஹார்

ஆ. மஹாராஷ்டிரம்

இ. ஜார்க்கண்ட்

ஈ. உத்தரப் பிரதேசம்

07. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். அவர் யார்?

அ. கருணாகரன்

ஆ. நட்வர் சிங்

இ. பிரணாப் முகர்ஜி

ஈ. டி.ஸ்ரீநிவாஸ்

08. சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?

அ. வினேஷ் போகத்

ஆ. ஆனந்த் அமிர்

இ. அமன் ஷெராவத்

ஈ. வினய் மாலிக்

விடைகள்: 1.ஆ, 2. இ, 3. அ, 4. ஈ, 5. அ, 6. ஈ, 7. ஆ, 8. இ






      Dinamalar
      Follow us