உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 25, 2016

அ நிறம் | அளவு
முத்துச் சிப்பிகள் (Pearl Oyster - பேர்ல் ஆய்ஸ்டர்) என்பவை, இரண்டு ஓடுகள் உடைய, நீர்வாழ் மெல்லுடலிகள். கடலுக்கு அடியில், பவளப் புற்றுக்கள், பாறைகள், கடினமான தரை போன்ற இடங்களில் வாழ்பவை. இவை அடர்த்தியாக வாழும் இடங்களுக்கு 'முத்து வங்கிகள்' என்று பெயர். இந்தியா, சீனா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சிப்பிகள் அதிகமாக விளைகின்றன.
