தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அறம் நிறைந்த ஆத்திசூடி

அறம் நிறைந்த ஆத்திசூடி

அறம் நிறைந்த ஆத்திசூடி


PUBLISHED ON : மார் 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஔவையின் ஆத்திசூடி ஒரு வரி பாடல்களைக் கொண்டது. ஒவ்வொன்றும மனித உள்ளத்திற்கு மருந்தாக அமைவது. இதில் இரு நோக்கத்தில் பாடியுள்ளார், ஔவையார். ஒன்று நல்லது. இன்னொன்று கெட்டது.

கெட்டவற்றைக் குறிப்பிடும்போது ஔவை பயன்படுத்தும் சொற்கள்,'விரும்பேல், பேசேல், அகற்று, ஒழி, இகழேல், பகரேல், சொல்லேல், நில்லேல், மறவேல்' இப்படியான பதங்களைப் பயன்படுத்துகிறார். இவை ஒவ்வொன்றும் ஆழமான பொருள் வேறுபாடுடையவை. கெட்டவற்றைக் கைக்கொள்ளாதே என்கிற ஒரே நோக்கத்தில், பயன்படுத்தப்பட்டவை.

எடுத்துக்காட்டாக,

நன்றி மறவேல்

வஞ்சகம் பேசேல்

ஔவை கூறிய கெட்டவற்றை அகற்றவில்லையெனில், வாழ்க்கை அகன்றுவிடும்.

இதைப்போன்றே நல்லனவற்றைப் பின்பற்றுவதற்கும் வரிசையாகச் சொற்களை அடுக்குகிறார்.

விரும்பு, கேள், முயல், திருந்தச்செய், சேர், பேண், கடைப்பிடி, வாழ், நில் இப்படி.

அறம் செய்ய விரும்பு

நாடு ஒப்பன செய்

நன்மை கடைப்பிடி

ஔவையார் 108 பாடல்களை ஆத்திசூடியில் பாடியுள்ளார். அவை ஒவ்வொன்றும் அறம் நிறைந்தவை.

- க. அன்பழகன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us