உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 18, 2016

அ நிறம் | அளவு
உலக அளவில், 'பெர்சனல் கம்ப்யூட்டர்'கள் விற்பனை குறைந்துள்ளதாக, அமெரிக்க ஆய்வு நிறுவனமான, 'கார்ட்னர்' தெரிவித்து உள்ளது. நடப்பு ஆண்டில், ஜூன் மாத முடிவில், உலகில், 6.43 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இது, முந்தைய ஆண்டின் விற்பனையைவிட, 5.2 சதவீதம் குறைவு. அமெரிக்காவில், 1.52 கோடி; மத்திய கிழக்கு நாடுகளில், 1.78 கோடி; ஆசிய பசிபிக் நாடுகளில், 2.27 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. விலை அதிகம், அமெரிக்க டாலருக்கு எதிராக உள்நாட்டு கரன்சி மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், விற்பனை குறைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.
