உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 18, 2016

அ நிறம் | அளவு
'ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறக் கூடாது' என்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் கோரிக்கையை, அந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏற்கவில்லை. இதை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கேமரூன் அறிவித்தார். அவர் பதவி விலகுவதைத் தொடர்ந்து சக அமைச்சர்கள் சோகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தார்கள். பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரசா மே, பதவியேற்றார்.
