PUBLISHED ON : ஜூலை 18, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்டலூர் உயிரியல் பூங்காவில், 5 ஆண், 8 பெண் என, 13 சதுப்பு நில மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், பெண் மான் ஒன்று, ஆண் குட்டியை ஈன்றுள்ளது. வண்டலூர் பூங்காவில் இந்த வகை மான், குட்டி ஈனுவது இதுவே முதல் முறை. இதனால், பூங்காவில் உள்ள சதுப்பு நில மான்களின் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது. சதுப்பு நில மான்கள், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களிலும், நேபாளத்திலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற இடங்களில் இந்த வகை மான்கள் அழிந்துவிட்டன.

