தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார்


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருஞ்சித்திரனார் நினைவு தினம் ஜூன் 11

சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தருபவை பாடல்கள். அதிலேயே அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பொதிந்து வைப்பது ஒரு வகை. இந்தப் பாட்டைப் பாருங்கள்...

எப்பொழுதும் பாதையில்

இடது பக்கம் நடந்து போ

தப்பில் லாமல் நடப்பதால்

தடைகள் வாய்ப்ப தில்லையே

நடந்து போகும் மேடையில்

நடந்து செல்லல் நல்லது

கடந்து போக, இரு புறம்

கவனி; பின் விரைந்து போ

படித்துக்கொண்டு நடப்பதும்

பந்து தட்டிப் போவதும்

இடித்துக் கொண்டு செல்வதும்

என்றும் தீங்கு செய்யுமே!

இதை எழுதியவர் பெருஞ்சித்திரனார்.

தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் தீராத பற்றுடையவர். இயற்பெயர் இராசமாணிக்கம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

குழந்தை, மலர்க்காடு என்னும் கையெழுத்து இதழ்களைப் படிக்கும் காலத்திலேயே நடத்தியவர். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம் என்னும் பெயர்களில் அச்சுப் பத்திரிகைகள் நடத்தியவர். அஞ்சல் துறையில் பணியாற்றிவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us