தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மார்கோனிக்கு முன்னோடி

மார்கோனிக்கு முன்னோடி

மார்கோனிக்கு முன்னோடி


PUBLISHED ON : நவ 28, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜகதீஷ் சந்திரபோஸ் ஆரம்பக்கல்வியை முடித்தபிறகு, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இயற்கை விஞ்ஞான பிரிவில், அறிவியல் பட்டம் பெற்றார். அங்கு படிக்கும்போதே, தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். கேம்பிரிட்ஜில் பட்டம் முடித்து இந்தியா திரும்பிய பிறகு, கொல்கட்டா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.

அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவி, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். தாவரங்களின் அசைவுகளையும், சலசலப்புகளையும் அளக்க, பல்வேறு நுண்ணிய உணர் கருவிகளை உருவாக்கினார். அவற்றைக்கொண்டு, தாவரங்களின் மீது பல்வேறு சோதனைகளைச் செய்தார். புரோமைடு (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை ஊசிமூலம், ஒரு எலிக்கும், தாவரத்திற்கும் செலுத்தினார். அந்த சோதனைகளின் மூலம் மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கும் புறத்தூண்டுதல்கள், தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார்.

வானொலி அலைகள் (-Radio waves - ரேடியோ வேவ்ஸ்) பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார். 1896ல், வானொலி அலைகளின் வழியே செய்திகளை அனுப்பும் கருவியை, மார்கோனி கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு முன்னரே, 1895ல் கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பு முறையை, போஸ் உருவாக்கி இருந்தார். இதை அறிந்த மார்கோனி, கண்டுபிடிப்பு உரிமத்தையும், பணத்தையும் அவரிடம் தர முன்வந்தபோது, 'பணத்திற்காக அறிவியலை விற்க முடியாது' என்று கூறி அவற்றை மறுத்தார்.

சாதனை: தாவரங்களுக்கும் உயிர் உண்டு என நிரூபித்தார்.

நூல்கள்: உயிருள்ள, உயிரற்றவைகளின் எதிர்வினை தன்மை (Response in the Living and Non-Living)

தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants)

கௌரவம்: அறிவியல் ஆராய்ச்சிக்காக, பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய 'சர்' பட்டம்.

1920: லண்டன் ராயல் கழக உறுப்பினர்.

1900: பாரிஸ் உலக விஞ்ஞானிகள் மாநாட்டில், இந்தியா சார்பில் பங்கேற்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us