PUBLISHED ON : அக் 29, 2018

அ நிறம் | அளவு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வின் பகுதியாக, நாடெங்கிலும் பல மாநிலங்களிலும் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2019 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலாகவுள்ளது.
திருப்பதி நகராட்சியும் அக்டோபர் 2ம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையைக் கொண்டுவந்தது. இந்நிலையில், தற்போது திருப்பதி கோவில் பகுதி முழுவதும் நவம்பர் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நடைமுறைக்கு வருகிறது. 50 மைக்கிரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பைகளை லட்டு விநியோகத்திற்குப் பயன்படுத்த திருப்பதி - திருமலை தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது.
