PUBLISHED ON : டிச 12, 2016

பி.எஸ்.எல்.வி. சி36 (PSLV- C36) ராக்கெட் உதவியுடன் ரிசோர்ஸ் சாட் -2ஏ (Resourcesat -2A) செயற்கைக்கோள், வெற்றிகரகமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த புதனன்று இது விண்ணில் ஏவப்பட்டது.
பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக, கடந்த 2003ம் அண்டு ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளையும், 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட் -2 செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் ஏவியது. அதன்பிறகு, தற்போது, மூன்றாவதாக, 1,235 கிலோ எடை கொண்ட ரிசோர்ஸ் சாட் -2ஏ என்ற இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு, விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது, பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில், சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள். இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் மூன்று கேமராக்கள், ரிசோர்ஸ் சாட் 2ஏ செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன.
