PUBLISHED ON : மே 22, 2017
'புஜங்கம்' என்றால் பாம்பு. இந்த ஆசனத்தின் கடைசி நிலையில், பாம்பு படம் எடுப்பது போல் நமது உடல் இருப்பதால், இந்த பெயர் வந்தது.
செய்முறை:
ஆரம்ப நிலை:
• ஒரு பாயில் குப்புற படுத்துக்கொள்ளவும்.
• கால்களை சேர்த்து வைத்திருக்கவும்.
• கைகளை தலைக்கு மேலே உயர்த்தி தரையில் வைத்துக் கொள்ளவும்.
• தாடையை தரையில் வைத்திருக்கவும்.
1. முதலில் உள்ளங்கைகளை பக்கவாட்டில் மார்புக்கு பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு மெதுவாக கைகளை ஊன்றி வயிற்றிலிருந்து மேலெழும்பி நேராகப் பார்க்கவும்.
3. மூச்சை இழுத்து விடவும்.
4. ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்கவும்.
5. பிறகு மெதுவாக கீழே வந்து தாடையை தரையில் வைத்துக் கொண்டு, கைகளை விடுவித்து, தலைக்கு மேலே ஆரம்ப நிலைக்கு கொண்டு சென்று, பிறகு மகராசனத்தில் ஓய்வு பெறவும்.
பயன்கள் :
1. முதுகுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மை (flexibility) கிடைக்கிறது.
2. சோம்பேறித்தனத்தை போக்கி, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
3. அனிச்சையாக (Reflex) செயல்படும் திறன் அதிகரிக்கிறது.
4. கண்பார்வை திறன் அதிகரிக்கிறது.
5. மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது.
- ஆர். தங்கலஷ்மி
